10 மீட்டர் ஏர்-ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றது மனுபாக்கர்- சரப்ஜத் இணை!
ஜூலை-30, பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர்- சரப்ஜித் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய இணை- தென்கொரிய இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய இணை 16 க்கு 10 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சாதனை படைத்தது.
ஏற்கனவே நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், ஒரே ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
Comments are closed.